நெல் கரிப் பூட்டை நோய்
காரண உயிரி
Ustilaginoidea virens
அறிகுறிகள்
நெற்கதிரில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நெல் மணிகளுக்குப் பதிலாக, பெரிய, உருண்டையான பூஞ்சைப் பந்துகள் உருவாகும். இந்தப் பந்துகள் ஆரம்பத்தில் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் தோன்றும், பின்னர் மஞ்சள் கலந்த பச்சை, அடர்பச்சை அல்லது பச்சை கலந்த கருப்பு நிறமாக மாறிவிடும். இவற்றில் பூஞ்சை வித்துக்கள் உருவாவதால், இவற்றின் மேற்பரப்பு மென்மையான வெல்வெட் துணி போலவோ அல்லது மாவு போலவோ மாறிவிடும். நன்கு முதிர்ந்த பூஞ்சைப் பந்துகள் வெடித்து, உள்ளே பெருமளவில் இருக்கும் பூஞ்சை வித்துக்களை வெளியேற்றும். பாதிப்பு அதிகமாகும் பட்சத்தில், விளையும் நெல்லின் தரம் பாதிக்கப் படும். பாதிப்பைக் கண்டறியும் முக்கிய அறிகுறி: தனித்தனி நெல் மணிகளுக்குப் பதிலாகப் பெரிய பச்சை அல்லது ஆரஞ்சு நிறப் பூஞ்சை வித்துப் பந்துகள் உருவாவதே இந்தப் பாதிப்பை அடையாளம் காண உதவும் முக்கிய அறிகுறியாகும்.